15 வயதான சிறுமியை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்திய 35 வயதான ஒருவர் மவுண்ட் லவ்னியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் 15 வயது சிறுமியை இணையம் மூலம் பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்றுள்ளார்.
மவுண்ட் லவ்னியாவில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, சிறுமியை அங்கு தங்க வைத்துள்ளார். இணையம் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து, தினசரி அந்த வீட்டில் சிறுமியை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
சிறுமி தெல்கொடவை சேர்ந்தவர். அவரது தாயாருடன் பேசி, சிறுமியை பாலியல் வர்த்தகத்திற்காக சந்தேகநபர் வாங்கியுள்ளார். சிறுமியின் தாயாரிடமும் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
சந்தேகநபர் நேற்று மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 மாதங்களில் சந்தேக நபர் சிறுமியை பல நபர்களுக்கு விற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் சிறுமியுடன் பாலியல் வர்த்தகத்தில் தொடர்புபட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது.