வட இந்திய பைலட் ஒருவரை நடிகை வனிதா விஜயகுமார், 4வதாக திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது.
நடிகை வனிதா என்றாலே தமிழ் திரையுலகில் பட்டாசுதான் வெடிக்கும். அந்தளவுக்கு அவரின் பேச்சும், திருமணங்களும் மிகவும் பிரபலம். விஜய்யின் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், சில படங்களில் மட்டுமே நடித்தார். போதிய வாய்ப்பு இல்லாததால் தனது இளம் வயதிலேயே நடிகர் ஆகாஷை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கருத்து வேறுப்பாட்டால் ஆகாஷை பிரிந்த வனிதா, அதன்பிறகு ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்ற பிறகு அவரையும் விவாகரத்து செய்தார் வனிதா. இதைத்தொடர்ந்து நடன இயக்குநர் ராபர்ட்டுன் டேட்டிங்கில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சந்திரலேகா’ சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன்பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகளான ‘பிக்பாஸ் சீசன் 3’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றார். பின்னர் ஒளிப்பதிவாளர் பீட்டர் பாலை காதலித்து மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணமும் விரைவில் பிரிவில் முடிந்தது.
இந்நிலையில் பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தில் நடித்து வரும் நடிகை வனிதா, 4வது திருமணம் செய்துக்கொண்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
நடிகை வனிதா கொல்கத்தா சென்றபோது வட இந்தியாவை சேர்ந்த விமான பைலட் ஒருவருடன் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் என வனிதாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் வனிதா கழுத்தில் கறுப்பு மணிக்கூட அணிந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.