26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் தேனீர் வைத்த பெண் மின்சாரம் தாக்கி பலி!

மின்சார உபகரணத்தில் தேனீர் தயாரித்தவேளை மின்சாரத்தினால் தாக்கப்பட்டு 56 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு- இலுப்படிச்சேனை- காரக்காடு பிரதேசத்தில் இன்று (7) இடம்பெற்றுள்ளது.

வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பேரின்பம் தெய்வானை என்பவரே உயிரிழந்தவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

காரக்காடு பகுதியில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்கின்ற தனது மகளை பார்ப்பதற்காக சென்றுருந்த நிலையில் அங்கு சமையல் வேலைகளை முடித்துவிட்டு தேனீர் சமைப்பதற்குத் தயாராகியுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் மின்உபகரணத்தில் சேதமடைந்திருந்த வயர் வழியாக மின்சாரம் தாக்கியதில் இவர் ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த சடலத்தை திடீர் மரணவிசாரணையதிகாரி பார்வையிட்டு குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்தார்.

அதையடுத்து உடல்கூறு மற்றும் பீசீஆர் பரிசோதனைகளுக்கான சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விரைவில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளம்

east tamil

அக்கரைப்பற்று புகைப்படக் கலை விழா- 2025

east tamil

கல்முனை-கொழும்பு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

east tamil

கந்தளாய் கொள்ளைச் சம்பவம்: சம்பூர் பகுதியைச் சேர்ந்த மூவர் கைது

east tamil

கல்லோயா ஆறு உடைபெடுக்கும் ஆபத்து

east tamil

Leave a Comment