முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 577 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 231 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 737 குடும்பங்களை சேர்ந்த 2023 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.