எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கை கடலுக்குள் நுழைந்தது குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி பல அடிப்படை உரிமைகள் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் மீனவர்கள் குழு ஆகியோரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் நலக கோதஹேவ, இலங்கை துறைமுக அதிகாரசபை, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை ஆகிய தரப்புக்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1