முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்
தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு வைத்த போது அதிலிருந்த குண்டு வெடிதுள்ளதாகவும் அவர் சிறிய காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1