எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கொடிகாமத்தை சேர்ந்த 7 பேரே காயமடைந்துள்ளனர்.
இன்று காலை கொடிகாமத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வடி வாகனமொன்றில் மேசன் வேலைக்காக அவர்கள் சென்றனர்.
அதிவேகமாக சென்ற வாகனம், எழுதுமட்டுவாளில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் திடீரென பிரேக் பிடித்த போது, வாகனம் தடம்புரண்டது. இதில் 7 பேர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்திருந்த 5 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1