வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தைசேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றயதினம் இரவு 11 மணிளவில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கத்திகளுடன் உட்புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதல் காரணமாக ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 26, 38, 52 வயதுடைய பெண்களும், 63, 29, 38 வயதான ஆண்களுமே காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1