வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.
வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து கண்டிவீதி வழியாக பயணித்த டிப்பர் வாகனம் மணிக்குக் கூட்டு கோபுர சந்தியில் சென்றுகொண்டிருந்த போது குறித்த சந்தியால் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சாவடைந்துள்ளார்.
சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இராஜேந்திரம் (65) முதியவரே சாவடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1