நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (21) நிந்தவூர் பிரதேச வீதியோர வியாபாரிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக் கவசம் அணியாமல் வீதிகளில் உலாவித்திரிவோருக்கு எதிராக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தலைமையில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இதே போன்று இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் இணைந்து சிலருக்கு இன்று மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனை பொறுபேறுகள் நோய்த்தொற்று தொடர்பில் நெகட்டிவ் என முடிவு கிடைக்கப்பெற்றதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.