பயணத் தடையின் போது நடத்தப்பட்ட சோதனையின் போது 30 மில்லிகிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற கர்ப்பிணிப் பெண்ணை தலத்துஓயா பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கெட்டவல, எரமுடுகொல்லவைச் சேர்ந்த 32 வயது கர்ப்பிணிப் பெண். தனது இரண்டாவது கருவை சுமக்கிறார்.
அந்தப் பெண் போதைக்கு அடிமையாகி வருகிறார், மேலும் அவரது கணவரும் போதைக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.
தலத்துஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சந்தேக நபர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1