30.6 C
Jaffna
April 6, 2025
Pagetamil
கிழக்கு

10,000 கட்டில்கள் அமைக்கும் செயல்திட்டம் அம்பாறையில் துரிதம்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் பணிப்பின் பேரில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலமையினை கருத்திற் கொண்டு 10 நாட்களுக்குள் 10,000 கட்டில்கள் அமைக்கும் செயல்திட்டம் தேசிய இளைஞர்கள் கழக சம்மேளனத்திடம் ஒப்படைக்கப் பட்டு நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது.

இதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகங்களின் கீழ் உள்ள இளைஞர் கழக சம்மேளனத்தினால் 10 கட்டில்கள் வீதம் தயாரிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 50,000 ரூபா நிதியுதவியுடனும் ஏனைய நிதிகள் தனவந்தர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்போடு குறித்த கட்டில்கள் யாவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் கொரோனா தொற்றிற்காக தயார் செய்யப்படும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செயல்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் ,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எம்.முபாறக் அலி ,அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவரும் அக்கரைப்பற்று பிரதேச சம்மேளனத்தின் தலைவருமான எம்.ரூக்சான் நன்றிகளை சகல தரப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தினை அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சமிலுல் இலாஹி ,காரைதீவு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பரீட், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பி.எம் றியாத் ,ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஜெயராஜ், பொத்துவில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கே.சமீர், திருக்கோவில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பிரபாகரன், பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் அனைவருக்கும் இணைந்து பார்வையிட்டிருந்தனர்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 200 கட்டில்கள் தயார் செய்யப்படுகிறது.
-பா.டிலான்-

இதையும் படியுங்கள்

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!