24.9 C
Jaffna
January 23, 2025
Pagetamil
மலையகம்

69 ஊழியர்களுக்கு தொற்று: கொத்மலை ஆடைத் தொழிற்சாலைக்கு பூட்டு!

69 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து கொத்மலை பகுதியிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரொனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 799 ஊழியர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இத்தொழிற்சாலையில் நுவரெலியா, கொத்மலை, புஸல்லாவை, ராவணாகொட மற்றும் நாவலப்பிட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தொழில்புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

கண்டி-மஹியங்கனை வீதி: போக்குவரத்து தடை

east tamil

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

east tamil

Leave a Comment