மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சில வைத்தியர்களின் பொறுப்பற்ற நடத்தையினால், சத்திரசிகிச்சைகள் சில தாமதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்படவிருந்த சத்திரசிகிச்சைகளும் இவ்வாறு தாமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. சத்திசிகிச்சைக்கு தயாராக சுமார் 12 மணித்தியாலங்கள் ஆகாரங்கள் உட்கொள்ளாமலிருந்தவர்கள், வைத்தியர்களின் இந்த மோதலால் சத்திரசிகிச்சை மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றமடையும் சம்பவங்கள் பாிவாகின்றன. நேற்று முன்தினம் 5 வயது சிறுமியொருவருக்கும் இதேகதி இடம்பெற்றது.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிராபத்தான நோயாளிகளிற்கான சத்திர சிகிச்சையை, வைத்தியர்களிற்கிடையிலான முரண்பாட்டினால் நடத்தாமல் ஒத்திவைக்கும் விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியசாலையின் 11,12 ஆம் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிற்கான சத்திரசிகிச்சை நேற்று முன்தினம் நடக்கவிருந்த நிலையில், வைத்தியர்களின் முரண்பாட்டினால் அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சைக்காக 5 வயது சிறுமியொருவரும் 12 மணித்தியாலங்கள் ஆகாரங்கள் உட்கொள்ளாமல் சத்திரசிகிச்சைக்காக காத்திருந்தார்.
இவ்வாறு சுமார் 11 நோயாளர்களின் சத்திரசிகிச்சை நடக்காமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த விவகாரத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சைகள்-