நீண்டகாலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுஷ்காவிற்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார்.
அனுஷ்கா கடந்த சில வருடங்களாகவே உடல் எடையால் பட வாய்ப்புகளையும் இழந்து வந்தார். யோகா, டயட் என எல்லாம் பண்ணியும் உடல் எடை குறைந்தபாடில்லை.
கடைசியாக வந்த சில படங்களும் பெரிதாக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பழைய படி மவுசை ஏற்படுத்தி கொடுக்காததால் தற்போது திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம். கடந்த சில வருடங்களாகவேபெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், ஏற்கனவே ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும் தொடர்ந்து அவரைப்பற்றிய வதந்திகள் வெளிவந்ததால் கடுப்பாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என தன்னுடைய வட்டாரங்களில் கூறிவிட்டாராம்.
ஆனால் அதில் ஒரு கண்டிஷன் என அம்மணி கூறியதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த நடிகைக்கு தற்போது 39 வயதாகிறது. ஆனால் தன்னைவிட நான்கு வயதுக்கும் கம்மியான ஆளாக இருந்தால் ஓகே எனக் கூறியுள்ளார்.
அம்மணிக்கு இருக்கும் வயதுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றால் நாற்பது நாற்பத்தைந்து தாண்டிவிடும். அப்போது பார்ப்பதற்கு கிழம் ஜோடி ஆகிவிடுவார்கள். ஆனால் அம்மணிக்கு இளம் ஜோடியாக இருக்க வேண்டும் என்று ஆசையாம். அதன் காரணமாக இளவயதுப் பையனாக பார்க்க சொல்லி பெற்றோர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம் அம்மணி.