Pagetamil
இலங்கை

மேலும் 14 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றினால் மேலும் 14 பேர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (05) அறிவித்தார்.

இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

ஹிங்குரக்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 51 வயதுடைய பெண் ஒருவர், வெலிக்கந்த விசேட சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 35 வயதுடைய பெண் ஒருவர், வெலிக்கந்த விசேட சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 04ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோணபல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 04 ஆம் திகதியன்று கொவிட் நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.

புளத்கொஹுபிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். உக்கிர கொவிட் நிமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய் மற்றும் உயர் குருதியழுத்தம் போன்றன மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெவனகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். பக்கவாதம், கொவிட் 19 தொற்று, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்காளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்லேல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 04 ஆம் திகதியன்று வெலிக்கந்த விசேட சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உக்கிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரப்பனை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 55 வயதுடைய ஆண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 04 உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயாகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். இருதயம் செயலிழந்தமை மற்றும் கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராதனை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 87 வயதுடைய ஆண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

குரண பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் இதய நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தும்மலசூரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 42 வயதுடைய பெண் ஒருவர், சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் இரணவில சிகிச்சை நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். புற்றுநோய் மற்றும் கொவிட் 19 தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிபத்கும்புர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 03 ஆம் திகதியன்று கொவிட் நிமோனியால் உயிரிழந்துள்ளார்.

இதையும் படியுங்கள்

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

விசாரணைக்கு பயந்து மாணவனின் வகுப்புத்தடையை நீக்கிய துணைவேந்தர்!

Pagetamil

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!