26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
கிழக்கு

முஸ்லிம் தலைவர்கள் பிழைகள் செய்திருந்தால் தனிப்பட்டரீதியில் எதிர்கொள்ளுங்கள்: மக்களை சூடாக்காதீர்கள்!

நமது அரசியல் பயணம் என்பது மிக புனிதமானதாக இருக்க வேண்டும் . நமது மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தொடர்பான இலக்கை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும் . நாடு நிம்மதியாக இருக்கின்ற போதுதான் நாட்டில் வாழுகின்ற மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் . நாட்டையும், நாட்டில் வாழும் சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் வேறாக தள்ளிவைத்து விட்டு முஸ்லிம் சமூகம் மாத்திரம் வாழ வேண்டும் என்று நினைப்பதென்பதும் இவ்வாறே ஏனையவர்கள் நினைப்பதும் இயற்கைக்கு முறணானது . இறைவன் உதவியால் யாருக்கும் எதற்கும் அச்சமடைய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை . யாருக்கும் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை . யாருக்கும் நாம் பதில் கூறவேண்டிய அவசியமும் இல்லை. நாடு நிம்மதியாக இருக்கின்ற போதுதான் நாட்டில் வாழுகின்ற மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் .அதாஉல்லா தெரிவித்தார். தேசிய காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் கே.எல் . உபைதுள்ளா தலைமையில் நேற்று முன்தினம் பாலமுனை ஹிறா நகர் கிராமத்திலுள்ள பரிமேட்டு சோலையில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நமது சமூதாயம் தொடர்பாக நாடு தொடர்பாக எம்மைப் பொறுத்தவரையில் நமது சமுதாயம் என்று மாத்திரம் பேசுவதை பிழையாக பார்க்கிறேன். சமுதாயம் சமுதாயம் என்று சொல்கின்ற எல்லாமே இறைவனால் படைக்கப்பட்ட மனித குலம்தான். ஏனைய சமுதாயத்தவர்களுக்கு வழிகாட்டியாக முன்மாதிரியான சமுதாயமாக இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும். வாழ்ந்து காட்ட வேண்டும். அது அரசியலாக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி இன்று தேசிய காங்கிரஸ் அதனை செய்து வருகின்றது .

அதனால்தான் அச்சமில்லாமல் இருக்கின்றோம். இன்று முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதும் சிறைக்குச் செல்வதும் விசாரணை என்பதும் என்கின்ற சூழ்நிலையிலே தேசிய காங்கிரஸ் கவனமாக இருக்கின்றது. ஒன்றை மாத்திரம் அவர்களுக்கு சொல்ல இருக்கின்றோம். நீங்கள் தனிப்பட்ட முறையில் பிழைகள் செய்திருந்தால் அதனை தனிப்பட்ட முறையில் எதிர் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்கொள்ள முடியாமைக்காக மக்களை சூடாக்குவதிலிருந்து தவிர்க்க வேண்டும். சுயநல அரசியலிலிருந்து விடுபட வேண்டும். ஆண்டாண்டு காலம் எமது மக்கள் அரசியலுக்காக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். எத்தனையோ தேர்தல்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு

Pagetamil

திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.

east pagetamil

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

திருகோணமலையில் இடம் பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா

east pagetamil

அம்பாறையில் போராட்டம்

Pagetamil

Leave a Comment