மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குளிரூட்டியில் சேமிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 குப்பி தடுப்பூசிகள் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணியாளர்களிற்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்படவிருந்தது. எனினும், அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை பணியாளர்கள் மறுத்துள்ளனர்.
தடுப்பூசி முறையாக- குளிரூட்டியில் சேமிக்கப்படவில்லையென அவர்கள் குற்றம்சாட்டினர்.
நேற்று முதல் இந்த சர்ச்சை நீடித்து வந்த நிலையில், இன்று தடுப்பூசிகள் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அனுப்பப்பட்ட ஒவ்வொரு குப்பியின் மூலமும் 10 பேருக்கு தடுப்பூசி செலுத்தலாமென தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1