27 C
Jaffna
January 4, 2025
Pagetamil
கிழக்கு

கல்முனையில் மின்வெட்டு விபரம்!

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறும் என, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணவத்தை, நிந்தவூர் தியேட்டர் வீதி ஆகிய பகுதிகளில் நாளை திங்கட்கிழமை (03) காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

செவ்வாய்க்கிழமை (04) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஒலுவில், திராய்க்கேணி, அம்பாறை பிரதான வீதி, ஹிஜ்ரா சந்தி, தைக்கா பள்ளி, கல்முனை பிரதான வீதி, வீரமுனை, பழைய சந்தைப் பகுதி, சொறிக்கல்முனை, வீரைச்சோலை மற்றும் நகர்ப்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (06) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்கலாவடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

செவ்வாய்கிழமை (11) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட திராய்க்கேணி பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

செவ்வாய்க்கிழமை (18) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஜே புளக் யீஸ்ட், வெஸ்ட், கல்லரைச்சல், காட்டுப்பள்ளி, கைகாட்டிபகுதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

புதன்கிழமை (19) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணவத்தை, நிந்தவூர் முஸ்தபா புரம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

திருகோணமலை நகர சபையின் முன்னேற்றகரமான செயற்பாடு

east tamil

மூன்றாங் கட்டை மலை விவகாரம்: மூதூரில் சமூக நீதிக்கான போராட்டம்

east tamil

திருக்கோணமலையில் மீண்டும் ஒரு சடலம்

east tamil

பத்தாவது வருடத்தில் Society of Tringographers

east tamil

Leave a Comment