கொரொனா நிலைமை காரணமாக ஹோட்டல்களில் நடத்த தடை விதிக்கப்பட்ட கூட்டங்கள், விருந்துகள் மற்றும் திருமணங்களை வீட்டிலோ அல்லது பிற இடங்களிலோ நடத்த முடியாது என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய வீடுகளிற்கு செல்வதை தவிர்க்குமாறும், விருந்தினர்களை வீடுகளிற்கு அழைப்பதையும் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுள்ளார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட திருத்தப்பட்ட எச்சரிக்கை நிலை III வழிகாட்டுதலின் கீழ் இதுபோன்ற நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மே 20 ஆம் திகதி வரை தடை செய்யப்பட்டுள்ளன என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
1
+1
+1
+1