நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் அடுத்த வாரம் இடைநிறுத்தப்படுகிறது. அவசரமான வழக்குகளும், பிணை வழக்குகளும் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நீதிச்சேவை ஆணைக்குழு செலயகத்தினல் இன்று சகல நீதிவான்களிற்கும் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையின்படி, நாளை 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை ஒரு வழக்குகளும் அதாவது பிணை சம்பந்தமான, நீதிபதி அவசரமென கருதம் வழக்குகள் தவிர்ந்த அல்லது ஒரு கட்சி அல்லது சட்டத்தரணி அவசரமென கேட்டுக்கொள்ளும் வழங்குகள் தவிர்ந்த எந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
நீதிமன்ற பதிவாளர்கள், நீதிபதிகள் ஆகக்குறைந்த ஊழியர்களை பணிக்கமர்த்தி செயற்பட வேண்டும்
பிணை விண்ணப்பங்களை காணொளி வழியாகவே விசாரணைக்குட்படுத்த வேண்டும்.
சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்களை நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
ஒத்திவைக்கப்படும் வழக்குகளின் அடுத்த வழக்கு தவணை திகதியை, வழக்கு விசாரணைக்கு முதல் நாள் அல்லது அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு முன்னர் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.