27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

மேலும் 9 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 09 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (01) அறிவித்தார். இதை தொடர்ந்து மரணங்களின் எண்ணிக்கை 687 ஆக உயர்ந்துள்ளது.

அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

கரந்தன பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த 29ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நெஞ்சு தொற்று மற்றும் நாட்பட்ட ஈரல் நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், கோப்பாய் கொவிட் சிகிச்சை நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று மற்றும் இருதய நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் ஏப்ரல் 28ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலகம பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான பெண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாச கடினநிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான ஆண் ஒருவர், வரகாபொல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார், இவரது மரணம் நேற்று முன்தினம் (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் பின்புலத்தினுடனான கொவிட்-19 நிமோனியா, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

யக்வில பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதான ஆண் ஒருவர், அம்பன்பொல சிகிச்சை நிலையத்தில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் புதிதாக கண்டறியப்பட்ட நீரிழிவு நோயின் பின்புலத்தில் ஏற்பட்ட உக்கிர சிறுநீரக பிரச்சினை நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், ரிகில்லகஸ்கட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர சுவாசிப்பதில் கடின நிலையுடன் கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விஷமடைவு நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 68 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சியுடன் இரத்தம் கட்டியாதல், கொவிட்-19 நிமோனியா, உக்கிர சிறுநீரக சிதைவடைவு, நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், குளியாபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, சிறுநீரக சிதைவடைவு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு அரசினால் நிவாரண தொகை

east tamil

“அர்ச்சுனா குழப்பத்தின் பிரதிநி” – சகாதேவன்

east tamil

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

Leave a Comment