24.8 C
Jaffna
January 18, 2025
Pagetamil
கிழக்கு

அம்பாறையில் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து!

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

பகல், இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்கள், வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து பாதுகாப்பினை குறித்த பிரதேசத்தத்தில் உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா அனர்த்தத்தின் பின்னர் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கஞ்சா கடத்தல்கள், அனுமதி பத்திரமின்றி மணல் அகழ்வு போன்ற சம்பவங்களை முறியடிப்பதற்காக இவ்ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தவிர கொரோனா சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், முகக்கவசம் அணியாதோரை வழிப்படுத்தல், உள்ளிட்ட பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் முகமாக இவ்மோட்டார் சைக்களிள் படையணி இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இம் மோட்டார் சைக்கிள் படையணியானது அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஊடக சந்திப்பு

east tamil

பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

மட்டக்களப்பு வாவியிலிருந்து இனந்தெரியாத சடலம் மீட்பு

east tamil

கலைமாறன் செ. லோகாராசா அவர்களுக்கு விருது

east tamil

இந்திய சோலர் மின் திட்ட விவசாய நிலத்தில் அறுவடை திருவிழா

east tamil

Leave a Comment