சாவகச்சேரியை சேர்ந்த 3 இளைஞர்கள் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் சில தினங்களிற்கு முன்னர் இளைஞர் ஒருவர் அனுமதிககப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
அவர் சில நாட்களின் முன்னர் நண்பர்களுடன் நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று வந்தவர்.
பின்னர் நண்பர்கள் தென்மராட்சியில் உள்ளூர் கழக கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடினர்.
இதன்பின்னர், காய்ச்சல் காரணமாக ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து, அவருடன் நுவரெலியா சென்று வந்த நண்பர்கள் 3 பேர் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் பிசிஆர் சோதனை செய்தனர். அவர்களிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.