25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

சலசலப்பின்றி அங்கஜன் அணியை வீழ்த்தினார் டக்ளஸ்: இ.போ.ச புதிய முகாமையாளர் பதவியேற்பு!

அங்கஜன் இராமநாதன் தரப்பினரின் தடைகளை மீறி, இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளராக செ.குலபாலசெல்வம் பதவியேற்றுள்ளார். நேற்று முன்தினம் (23) அவர் கோண்டாவிலுள்ள தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இ.போ.சவின் வடபிராந்திய முகாமையாளராக குலபாலசெல்வம் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவர் தனது நியமன கடிதத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, அந்த நியமன கடிதத்தை அவரும் வழங்கி வைக்க கேட்டார். அதன்படி, டக்ளஸ் தேவானந்தாவும் கடிதத்தை வழங்கி வைத்து புகைப்படம் எடுத்தார்.

இதையடுத்து, வடபிராந்திய சாலைகளில் ஆட்தொகையில் குறைந்ததும், பலவீனதுமான தொழிற்சங்கமாக, அங்கஜன் இராமநாதன் தரப்பு தொழிற்சங்கம் போர்க்கொடி தூக்கி, அங்கஜனை சந்தித்து நியமனத்தை இரத்து செய்ய கோரியது.

அங்கஜனின் தலையீட்டினால் புதிய முகாமையாளர் நியமிக்கப்பட்டார். இது அங்கஜன் – டக்ளஸ் தேவானந்தா தரப்புக்களிற்குள் அரசியல் மோதலை தீவிரப்படுத்தியது.

இ.போ.ச முகாமையாளர் மட்டுமல்லாமல், வேலணை பிரதேச செயலாளர் இடமாற்றம், நல்லூர் பிரதேச செயலாளர் இடமாற்ற முயற்சியென, அங்கஜன் இராமநாதன் தரப்பினரின் தலையீட்டினால் யாழ் அரச நிர்வாகம் அரசியல் கலப்புடன், சீர்குலையும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை கொண்டு சென்றதாக தெரிகிறது. தனியொரு அரசியல்வாதியின் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப நியமனங்கள் வழங்கப்படக்கூடாதென, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்ட “டோஸை“ அடுத்து, செ.குலபாலச்செல்வமே மீண்டும் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தில் பொதுஜன பெரமுன தொழிற்சங்கமும் தீவிர அக்கறை காட்டியிருந்தது. அத்துடன், வடக்கிலுள்ள அனைத்து பிரதான தொழிற்சங்க பிரதிநிதிகளும், அவரது பதவியேற்பில் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் செவ்வாய்கிழமை அவருக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே செய்ததை போல, அரசியல்வாதிகள் இனியும் முகாமையாளர் விவகாரத்தில் வாலாட்டினால், பணிப்புறக்கணிப்பு செய்வோம் என பதவியேற்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தை மிரட்டும் எலிக்காய்ச்சல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Pagetamil

ஃபோர்ட் சிட்டி ஆணைக்குழு நியமனம்

east pagetamil

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்களப்பில் சோகம்

east pagetamil

Leave a Comment