தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பண்டிகைக்கால விழாக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை நிறுத்துமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சித்திரை புத்தாண்டுக் காலத்தின்போது மக்கள் கடைத் தெருக்களில் மிகவும் நெருக்கமாக இருந்தமை, உல்லாசப் பயணங்களை மேற்கொண்டமை உள்ளிட்ட காரணங்கள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.
ஆகவே, மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறும், தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை நிறுத்துமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், யாத்திரைகள், உல்லாசப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்வதுடன், அத்தியவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.