நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…
மேஷம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். தொழில் மற்றும் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்து வைக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. அரசியல் துறையில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். வெளிநாடு செல்வதற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்களும் வாய்ப்புகளும் வந்து சேரும்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு விசா சம்பந்தப்பட்ட காரியங்களை துவக்குவதற்கு இன்று உகந்த நாளாகும். தாய் நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.
குடும்பத்தில் அமைதி தவழும் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடைய கூடிய நாளாகும். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
ரிஷபம்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பிரயாணத்திற்கு வாய்ப்புண்டு என்பதால் உங்கள் பிரயாணங்களால் வெற்றி அடைவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவைகளில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆகும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் அலைச்சல்கள் போக போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இவற்றில் கவனம் தேவை மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். கல்விச் செலவுகள் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு.
அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக வாய்ப்பு உள்ளது. ஒருசிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். ஜெயம் கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.
மிதுனம்
நேயர்களுக்கு இன்றைய நாள் மன மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் சந்தோஷமும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். வேலையில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற நிலையை காண்பார்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன்னே வந்து நிற்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி படித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.
கடகம்
நண்பர்களுக்கு நல்ல நாள் ஆகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். சொத்து வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.
கூட்டுத்தொழில் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். கம்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஆன நாள் ஆகும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனையில் ஏற்படும் இவற்றில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகவல்கள் வந்து சேரும் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் என்று தங்கள் முயற்சிகளை துவக்கலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரையும் நம்பிக்கையும் பெற்றுக் கொள்வார்கள். இதில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் அமைதி தவழும்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருந்து வரும் மாணவர்களின் கல்வி மேம்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். முயற்சிகள் லாபம் தருவதாக அமையும். கலைத்துறை பத்திரிக்கைத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் வருமானத்தை தருவதாக இருக்கும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் உண்டாகும் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும். ஆராய்ச்சி துறை மாணவர்களுக்கும் மருத்துவ துறை மாணவர்களுக்கும் சற்று கடினமான நாள் இன்றைய நாள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.
கன்னி
அன்பர்களுக்கு உங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உங்கள் சொல்லும் செயலும் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்புண்டு என்பதால் பொறுமையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒத்துப் போவதில் சட்ட சிக்கல்கள் வந்து நீங்கும்.
குழந்தைகளைப் பற்றிய அல்லது அவர்களுடைய எதிர்காலத்தை பற்றிய கவலைகள் மனதை ஆட்கொள்ளும். ஆயினும் அவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு இருப்பினும் சற்று கடின முயற்சி தேவைப்படும்.
திருமணம் போன்ற சுபகாரிய செயல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு என்பதால் நிதானத்தை கடைப்பிடிக்கவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் முடிவு எடுப்பதை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் நல்ல முறையில் செல்லும்.
துலாம்
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு உகந்த நாள் குடும்பத்தில் அமைதி தவழும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலையின் மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.
கூட்டுத் தொழிலில் ஆதாயம் தருவதாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்கள் அவைகளிலிருந்து எளிதில் வெளிவந்துவிடும்.
உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளிலிருந்து வருபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை பத்திரிக்கைத்துறை மீடியா துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மாணவர்களின் கல்வி மேம்படும் வெளிநாடுகளில் கல்வி கற்று முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க எதிர்பாராத பண உதவி வந்து சேர வாய்ப்பு உள்ளது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும். தாய்நாடு திரும்ப சிந்தனை கொண்டு இருப்பவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்புவதற்கான சூழ்நிலைகளில் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். மொத்தத்தில் முன்னேற்றமான நாடாக இன்றைய நாள் அமையும். கோவிலுக்குச் செல்லுதல் ஆன்மீக மகான்களின் தரிசனம் குருமார்களின் தரிசனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தனுசு
நண்பர்களுக்கு இந்த நாள் நல்லநாள் ஆகும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு கடன் பெற்று சொத்துக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உத்தியோகத்தில் நல்ல நிலைமையை பெறுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சுபச் செலவுகள் உங்களை தேடி வரும்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகள் வெற்றியில் முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது.
புதிய வேலைவாய்ப்புகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும் கணவன் மனைவி உறவு அன்னியோனியமாக இருக்கும்.
மகரம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் பல நல்ல பலன்களை கொடுக்கும். திருப்தியான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும். குழந்தைகளால் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு சில நிகழ்வுகள் ஏற்படலாம் என்பதால் சொல்லிலும் செயலிலும் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி பெறுவார்கள்.
கும்பம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சொத்து தொடர்பான காரியங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள். பற்றாக்குறை இருந்து வந்த போதிலும் திறம்படச் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமும் உண்டாகும்.
பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். அவைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று விடும். பெண்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் வெற்றி கிடைக்கும்.
மீனம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறந்த முடிவினை எட்டுவீர்கள். பெண்களுக்கு இனிமையான நாடு ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதி கிடைக்க பெறுவார்கள். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். திடீர் தன வரவு உண்டாக வாய்ப்பு உள்ளது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
வயதானவர்களுக்கு கால் மற்றும் மூட்டு பகுதிகளில் வலி ஏற்பட்டு விலகும். சொத்துக்கள் வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளையும் இருப்பவர்கள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.