25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இந்தியா

இந்தியாவில் தாண்டவமாடும் கொரோனா இரண்டாவது அலை; முதல் முறையாக மூன்று லட்சத்தைக் கடந்த பாதிப்புகள்..!

இந்தியா நேற்று ஒரே நாளில் 3.15 லட்சம் கொரோனா பாதிப்புகளுக்கும் மேல் பதிவு செய்துள்ளது. இது இந்தியா இதுவரை கண்டிராத தினசரி அதிகரிப்பாகும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதார அமைப்புக்கு இடையே, இந்தியா நேற்று ஒரே நாளில் 2,104 இறப்புகளைக் கண்டது. இது இதுவரை தொற்றுநோய்களில் இந்தியாவுக்கு கிடைத்த மற்றொரு மோசமான சாதனையாகும்.

3,14,835 புதிய பாதிப்புகளுடன், மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,59,30,965’ஆக உள்ளது. இதற்கிடையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,84,657’ஆக உள்ளது.

நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் கொரோனா பாதிப்புகள் உள்ளன. இவற்றில், மகாராஷ்டிராவில் 67,468 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 568 இறப்புகளும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் டெல்லியில் 24,638 புதிய தொற்றுநோய்களும் 249 சிறப்புகளும் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா (4,027,827), கேரளா (1,197,301), கர்நாடகா (1,109,650), தமிழ்நாடு (962,935), மற்றும் ஆந்திரா (942,135) ஆகியவை மொத்த பாதிப்புகளின் அடிப்படையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் ஐந்து மாநிலங்கள் ஆகும்.

முன்னதாக, மகாராஷ்டிரா அரசு நேற்று இரவு மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் அதிகரிப்பை எதிர்த்துப் போராடுவதற்கு “பிரேக் தி செயின்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை அறிவித்தது.

மாநிலத்தில் உள்ள உத்தவ் தாக்கரே அரசு அலுவலக வருகை, திருமண விழாக்கள் மற்றும் பயணங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. புதிய கட்டுப்பாடுகள் இன்று இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வந்து மே 1 காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும்.–

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா!

Pagetamil

சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி?

Pagetamil

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

Leave a Comment