வலி கிழக்குத் தவிசாளர் – வீதி அபிவிருத்தி அதிகார சபை கலந்துரையாடி இணக்கத்திற்குச் சென்று வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என அறுவுறுத்தி எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிக்கு வழக்கை மல்லாகம் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தவணையிட்டார்.
தம்மால் வீதியை அபிவிருத்தி செய்வதற்காக நாடப்பட்ட பெயர்ப்பலகையினை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றினார் எனக் குற்றஞ்சாட்டி அரச சொத்துக்குத் சேதம் விளைவித்தார் எனத் தெரிவித்து கடந்த வருட இறுதியில் வலிகிழக்குத் தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் தவிசாளர் கைதுக்கு எதிராக நீதிமன்ற பாதுகாப்பைப் பெறும் நோக்கில் முன்பிணை பெற்றார். இந் நிலையில் மீள வீதி அபிவிருத்தி அதிகார சபை சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவ் வழக்கு இன்று புதன்கிழமை காலை (21) மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சார்பில் சிரோஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியது. சட்டத்தரணிகளால் தற்போதைய நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய அனுமதிகளை உரியவாறு பிரதேச சபையில் இருந்து பெற்றுக்கொள்கின்றது. இந் நிலையில் குறித்த வீதிக்கான பெயர்ப்பலகைக்கான அனுமதியையும் பெற்றுக்கொள்வதற்கான கடிதங்கள் கிடைத்துள்ளன. குறித்த வழக்கு நிலுவையில் உள்ளமையின் காரணமாக குறித்த விளம்பரப்பதாகைக்கான அனுமதி பற்றி பரிசீலிக்க முடியவில்லை என முன்வைக்கப்பட்டது.
இந் நிலையில் இருதரப்புமாக முடிவெடுத்து வழக்கை பின்வாங்கிக் கொள்ள பெறமுடியும் எனவும் நிதிபதி அறிவுறுத்தி வழக்கை எதிர்வரும் மார்கழி முதலாம் திகதிக்கு தவணையிட்டதுடன் குறித்த வழக்கில் தவிசாளரை ஐம்பதாயிரம் ரூபா சொந்தப்பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.
இதேவேளை தொல்லியல் திணைக்களம் தவிசாளருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு மாலை 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.