வவுனியா செட்டிகுளம் கப்பாச்சிபகுதியில் காட்டு யானைதாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சாவடைந்துள்ளார்.
நேற்றயதினம் மாலை காப்பாச்சிபகுதியில் உள்ள வயல்காணிக்கு குறித்த நபர் காவலுக்கு சென்றுள்ளார். இன்றையதினம் வீடு திரும்பாத நிலையில் வயற்பகுதிக்கு சென்ற சிலர் அவர் சடலமாக இருப்பதனை அவதானித்துள்ளதுடன், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவத்தில் சின்னசிப்பிகுளம் பகுதியை சேர்ந்த நலீம் (43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சாவடைந்துள்ளார்,
குறித்த நபர் காட்டுயானை தாக்கியமையால் சாவடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1