25.1 C
Jaffna
January 4, 2025
Pagetamil
கிழக்கு

முதலைகளின் நடமாட்டம் அம்பாறை மாவடிப்பள்ளி பகுதியில் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில்  சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில்  அதிகளவிலான முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது மாவடிப்பள்ளி பாலத்தை அண்மித்த  ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால்  வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி  பகுதியில்  இரவு நேரங்களில் அதிகமான  சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.

மேலும் இம்மாவட்டத்தில் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம்  உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.மேற்படி  பகுதிகளில் உள்ள  வாவிகள்  குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் தற்போது   சிறுபோக வேளாண்மை செய்கை   ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில்   நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடுஇ மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள்      முதலைகளினால் இரைக்குள்ளாகின்றது.  இப்பகுதியில்    இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி  பகுதிகளில்  முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன்  முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள்  எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதலை அபாயம் தெரியாமல்  இப்பகுதியில்  பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருக்கோணமலையில் மீண்டும் ஒரு சடலம்

east tamil

பத்தாவது வருடத்தில் Society of Tringographers

east tamil

வியாழேந்திரனின் சாரதிக்கு விளக்கமறியல்!

Pagetamil

கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் சந்திப்பு

east tamil

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சண்முகம் குகதாசனின் கோரிக்கைகள்

east tamil

Leave a Comment