தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சனிக்கிழமையன்று காரில் ஆபத்தான முறையில் பயணித்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 முதல் 20 வயதுக்குட்பட்ட நபர்கள் அக்குரன பகுதியில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் இன்று பாணந்துறை நீதிவான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
இன்று காலை நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் பிரிவினால் இந்த குழு கைது செய்யப்பட்டது.
இதற்கிடையில், காரின் சாரதி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1