25.9 C
Jaffna
December 24, 2024
Pagetamil
கிழக்கு

சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின் தெரிவித்துள்ளார்.

நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்விஇ சமூகஇ சமயஇ அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)’ நூல் சனிக்கிழமை(10) மாலை(இரவு) மருதமுனைஇ பொது நூலக கேட்போர் கூடத்தில் பழீல் மொலானா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் செனட்டர் மசூர் மௌலானா அரங்கில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் கூறியதாவது

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மட்பாண்ட எச்சங்கள் அரபியினருடையதா?இது எந்த கலாச்சாரத்திற்குரியது என்பதை அறியாதவர்களாகத்தான் இங்கு பகுப்பாய்வு செய்கின்ற தொழிநுட்பவியலாளர்கள் இருக்கின்றார்கள்.எனவே தான் தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவரும், தேசிய கல்வி நிருவக பேரவை உறுப்பினருமான பேராசிரியர், கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் (நளிமி) உட்பட சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், முக்கிய கல்விமான்கள், கலை, இலக்கிய ஜாம்பவான்கள், அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேத்தாழை துறைமுக பிரதேச சர்ச்சையை கேட்டறிந்த சாணக்கியன்

Pagetamil

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டம்

east tamil

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Pagetamil

அனுமதியின்றி சுத்தியலுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்த இருவர் கைது

east tamil

நீதி வேண்டி பிரதேச செயலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

east tamil

Leave a Comment