25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
குற்றம்

பிரித்தானியாவில் மதுபோதையில் வீதியில் விழுந்து கிடந்து புலம்பிய தமிழருக்கு நடந்த கதி!

பிரித்தானியாவில் மதுபோதையில் வீதியில் விழுந்து கிடந்த தமிழர் ஒருவர் பற்றிய சம்பவத்தை, அங்கு வாழும் ஒருவர் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

புதியவன் இராசையா என்பவர் பதிவிட்ட அந்த பதிவு கீழே-

நேற்று, நான் வேலைசெய்யும் கடைக்கு முன்பாக உள்ள பேரூந்து தரப்பில் இவர் விழுந்து கிடந்தார். இலங்கைத் தமிழர். காலை 10.30 மணி இருக்கும். நிறை தண்ணி. இவர் பச்ச துணை வார்த்தைகளால் பேரூந்துக்காக காத்திருந்த கருப்பின் பெண் ஒருவரை ஏசிக்கொண்டிருந்தார். அந்தப் பெண் இவரை சட்டை செய்யவில்லை. தமிழ் கெட்ட வார்த்தை புரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அவரிடம் சென்று, எழுந்து வீட்டுக்கு போங்கோ என்றேன். “போடா பு. மோனே” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு, திருப்புகழில் வருவது போல, கடகடவென ப.வே. கள் என அங்கு வரும் பெண்களை பாடிக்கொண்டிருந்தார்

அங்கு நின்ற வெள்ளை இனத்தவர் ஒருவர், அவசர ஊர்தியை தொலைபேசியில் அழைத்தார்.

அவசர ஊர்தியும் அவசரம் இல்லாமல் வந்தது.

அவர்கள் இருவரோடும் தமிழிலேயே கதைத்தார். நான் உயிர் போனாலும் அம்புலன்ஸ் ஏறமாட்டேன் . என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார்.

” அவர் வண்டியில் ஏற முடியாதாம்” என்று அவர்களுக்கு நான் கூறிவிட்டு கடைக்குள் போய்விட்டேன்.

சற்று நேரம் கழித்து பெண் தாதி உள்ளே வந்து நீ அவரின் மொழி பேசுவாயல்லவா. அவர் இரண்டு முகவரிகளை சொல்கிறார். அவரின் முகவரி எது என்று கேட்டுச் சொன்னால் அவரை வீட்டில் இறக்கிவிடலாம் என்றார்.

நான் வண்டியிலும் ஏறி, ” அண்ணை உங்கட வீடு எங்கை” என்று கேட்டன். போடா பு. மோனே.
என்று பதில் சொன்னார்.

தாதி கேட்டார் என்ன சொன்னவர் எனக் கேட்டார்.

நான் என்னத்த சொல்ல. அவர் சொன்னதைச் சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டாள்.

அதன் பின் அவர்களிடம்
Packing thamil என்று சொன்னார்.

அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

நீ பேசும் மொழி தமிழா என்று கேட்டார்.

ஆம் என்று சொன்னதும். நன்றி. சென்றுவாருங்கள். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம். என்றார்கள்.

என்ன பிரச்சனையோ.


தமிழ்பக்க செய்திகளை ஜேவிபி, நியூலங்கா உள்ளிட்ட பல இணையங்கள் மீள் பதிவு செய்து வருகின்றன. செய்திகளை உடனுக்கடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment