நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவர், சவக்கிடங்கில் உயிருடனிருப்பது தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பை சேர்ந்த 40 வயது மீனவர் ஒருவருக்கே, இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.
மீனவராக அந்த நபர் மயக்கமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து, உடல் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டது.
சடலத்தை பார்வையிட உறவினர்கள் சவக்கிடங்கிற்கு சென்ற போது, அவர் உயிருடனிருப்பதை அவதானித்தனர்.
உடனடியாக, அவர் வைத்தியசாலையின் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டார்.
உடலில் சீனியின் அளவு குறைந்ததால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக வைத்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் உயிரிழந்து விட்டதாக அறிவித்த வைத்தியர் மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.