கண்டிஷனர் செய்யுங்கள்
முடி வளர்ச்சிக்கு முடி நுனிகள் மெல்லியதாகவும் சேதமாகவும் இருப்பது வேகத்தை குறைக்கும். உச்சந்தலைக்கு செய்யும் பராமரிப்பு கீழ் முனைக்கு செய்வதில்லை. இதனால் முடி முனைகள் ஊட்டம் இல்லாமல் இருக்கும்.
ஒவ்வொரு முறை தலைக்குளியலுக்கு பிறகும் கூந்தலக்கு கண்டிஷனிங் பயன்படுத்த தயங்கடவேண்டாம். இது தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க செய்யும். முடி வளர்ச்சியை தூண்டும்.ஷாம்பு பயன்படுத்த விரும்பாதவர்கள் இயற்கை பொருள்களை கண்டிஷனராக பயன்படுத்தலாம்.
சூடான ஆயில் மசாஜ்
கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கவும் வலு கொடுக்கவும் மசாஜ் செய்வது அவசியம் . வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு பயன்படுத்தலாம்.
கூந்தலின் அளவுக்கேற்ப தேவையான எண்ணெய் எடுத்து டபுள் பாய்லிங் மெத்தட் முறையில் சூடு செய்து கூந்தலை பகுதி வாரியாக பிரித்து எண்ணெயை தடுத்து நன்றாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.சரியான அழுத்தம் கொடுத்தால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் வேகமாக பாயும். இது மயிர்க்கால்களில் பரவி முடி வளார்ச்சியை ஊக்குவிக்கும்.
கூந்தலை சிக்கில்லாமல் வைத்திருங்கள்
கூந்தல் வளர வேண்டும் என்று சொல்லிவிட்டு கூந்தலை எப்போதும் முடிந்து கொண்டு வைத்தால் அது சிக்கலை உண்டாக்கிவிடும். முடியை சிக்கலில்லாமல் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்தும் சீப்பும் கூட உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். அல்லது முடி உதிர்தலை உண்டாக்கலாம்.
அதிக கூர்மையான முட்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துவது உராய்வை உண்டாக்கும். இது முடி உதிர்தலை அதிகப்படுத்தும். அதற்கு பதிலாக முறுக்கு முட்களை கொண்ட சுழற்சி சீப்புகள் கூந்தலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்யும். கூந்தலில் பாதிப்பையும் உண்டாக்காது. இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு கூந்தலை சிக்கில்லாமல் சீவி பின்னலிட்டு முடிச்சிட்டு தூங்குங்கள்.
தலைகீழாக முடியை புரட்டுங்கள்
இது வித்தியாசமானதாக தோன்றலாம். தலைகுளியலுக்கு பின்பு முன்புறம் குனிந்து கூந்தல் முகத்தின் முன்பு வந்து விழும்பொது சிறிய டவலை கொண்டு கூந்தலை தட்டி விடுவது வழக்கம். இது முடியில் ஒட்டியிருக்கும் சீயக்காயை அகற்ற நம் வீட்டு பெண்கள் முன்பு செய்தது தான். ஆனால் இப்படி தலை கீழ் முடியை போட்டு முன்னும் பின்னும் புரட்டுவது கூந்தல் வளர்ச்சியில் அதிசயத்தை உண்டாக்கலாம்.
கடினமான விஷயம் இல்லை. எளிதாக செய்யகூடியதுதான். தினசரி சில நிமிடங்கள் உங்கள் முடியை தலைகீழாக புரட்டி நிமிர்ந்து செய்வதன் மூலம் முடியின் நுனிவரை ஊட்டம் கிடைக்கிறது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது.