பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள மாநகரசபை முதல்வரை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது குறித்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்த ஆட்சியின் கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.