யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை, சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் நகர முதல்வரை சந்திக்க, சட்டத்தரணிகள் முயற்சித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மணிவண்ணனின் சகோதரரான சட்டத்தரணி வி.திருக்குமரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு சென்றது. வவுனியாவிலும் சட்டத்தரணிகள் குழுவொன்று இணைந்து, மணிவண்ணனை சந்திக்க முயற்சித்தனர்.
எனினும், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
எனினும், அவர்கள் கொண்டு சென்ற உணவை மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1