வி.மணிவண்ணன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இக்கைதானது தமிழ் தேசியத்துக்காக பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். இந்த நாட்டில் தமிழ் மக்களை வாழ விடமாட்டோம் என்பதை இந்த அரசு சொல்கின்றது. இக் கைதுக்கு எதிராக தமிழ் மக்கள்,தமிழ் அரசியல் கட்சிகள்,தமிழ் சிவில் சமுகங்கள் ஒன்றிணைந்து விரைவாக குரல் கொடுக்க வேண்டும்.
தமிழ் இனமே தங்களை பாதுகாத்து கொள்ளத்தக்க கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தவறுவோமாக இருந்தால் தமிழ் மக்களை இந்த அரசிடமிருந்து ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
மேலும் மணிவண்ணனின் விடுதலைக்காக இலங்கையில் உள்ள அனைத்து தூரகங்களிளில் உள்ள இராஐதந்திரிகளும் இந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.