Pagetamil
இலங்கை

யாழ் மாநகரசபையில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஊழியர்கள்!

யாழ் மாநகரசபையில் சட்டவிரோதமாக, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இன்று (8) இடம்பெற்ற யாழ் மாநகரசபை அமர்வில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. எனினும், இன்று இது குறித்து முதல்வர் வி.மணிவண்ணன் பதிலளிக்கவில்லை. அடுத்த அமர்வில் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் தற்காலிக ஊழியர்களாக மூவர் இணைக்கப்பட்டு, மின்சார பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை இணைப்பதில் எந்த நிர்வாக நடைமுறையும் பின்பற்றப்படவில்லையென மாநகரசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சபை அனுமதி இல்லாமல், கேள்வி கோரல் மேற்கொள்ளாமல் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கவில்லை. அவர்கள் நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் வசிக்கிறார்கள்.

யாழ் மாநகரசபை ஈ.பி.டி.பி பெண் உறுப்பினர் ஒருவரின் மகன், மணிவண்ணன் அணியை சேர்ந்த நல்லூர் பிரதேசசபையின் பெண் உறுப்பினரின் மகன், கொக்குவிலை சேர்ந்த இளைஞன் ஆகியோரே, மாநகர முதல்வரினால் தன்னிச்சையாக- உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் இன்று சர்ச்சையானதையடுத்து, யாழ் மாநகர ஆணையாளர் தெளிவான பதிலளிக்க முடியாமல் திண்டாடினார். அவர்களின் நியமனத்திற்கு தான் அங்கீகாரம் வழங்கவில்லையென முதலில் கூறியவர், பின்னர், அங்கீகாரம் வழங்கியதாக ஏற்றுக்கொண்டார்.

அந்த நியமனங்கள் சட்டவிரோதமானவை என கணக்காய்வு திணைக்களம் பரிசோதித்தால் அதற்கு ஆணையாளரே முழுமையான பொறுப்பேற்க வேண்டுமென சபையில் வலியுறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து அடுதத சபை அமர்வில் விளக்கமளித்துள்ளதாக முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

விசாரணைக்கு பயந்து மாணவனின் வகுப்புத்தடையை நீக்கிய துணைவேந்தர்!

Pagetamil

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!