யாழில் அரசியல்வாதிகள் பெயரை பயன்படுத்தி பெண்ணிடம் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்த அரச உத்தியோகத்தர் கைது..
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்தி பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரிய சந்தேகத்தின் பெயரில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியை சேர்ந்த ஒருவர் அங்கஜன் இராமநாதனின் தரப்புடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளார். அவர், அங்கஜன் இராமநாதனின் பெயரைச் சொல்லி, அவரை உங்களுக்கு பிடிக்கும் என கூறி அவருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதாக பெண் ஒருவரை பாலியல் லஞ்சம் பெறுவதற்கு அழைத்துள்ளார்.
இந்த சம்பவத்தை, அந்த யுவதி, அங்கஜன் இராமநாதனின் அணியிலுள்ள ஒருவருக்கு தெரிவிக்க, அவர் அங்கஜன் இராமநாதனிடம் அதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த ஆசாமியை மடக்கும் ஏற்பாடுகள் நடந்தன.
ஆசாமியுடன் தொடர்ந்து பேசுமாறு யுவதியை அறிவுறுத்தி, சாதுரியமான முறையில் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
மடக்கிப் பிடித்த நபரை பொலிசாரின் உதவியுடன் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.