பொதுப்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் 53 இருக்கைகள் கொண்ட பேருந்தை செலுத்திச் சென்ற 15 வயது பாடசாலை சிறுவனை மீதெனிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரதான சாலையில் பேருந்தை செலுத்த அனுமதித்ததற்காக, இளைஞனின் தந்தை மீது மீதெனிய பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
வீரகெட்டியவிலிருந்து மீதெனியவுக்கு பேருந்தை செலுத்திச் சென்ற சிறுவன், வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரமும் இருக்கவில்லை.
பின்னர், சிறுவனின் தந்தையும் மீதெனிய பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டார். அங்கு இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை வலஸ்மல்ல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1