ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் வாகனமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
போர்வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவரின் ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அமைதி பேரணி சென்றனர்.
இதன்போது, பொலிஸ் ஜீப்பிற்கு கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயரத்ன தேரர், போராட்டத்தை குழப்புவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1