அதுல்யா ரவி சினிமாவில் அறிமுகமாகியதென்னவோ, குடும்ப குத்துவிளக்காத்தான். ஆனால், அந்த குத்துவிளக்கை லைட் போட்டு தேடினாலும் காணக்கிடைக்காது. அண்மைக்காலமாக, படங்களில் வகைதொகையில்லாமல் கவர்ச்சியை வாரியிறைத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் கவர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருந்தார்.
கவர்ச்சி நாயகியாக முடிவெடுத்த பின்னர் இனி எதையும் மறைத்து பிரயோஜனமில்லை என, முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு மொத்தத்தையும் காட்டி நடித்துள்ளார் அதுல்யா ரவி.
ஹீரோவாக எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டும் என்று பல காலமாக போராடிக் கொண்டிருப்பவர் சாந்தனு. இத்தனைக்கும் இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்த பாக்கியராஜின் மகன்.
ஆனால் அவரால்கூட அவரது மகனுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பாக்கியராஜின் பழைய முருங்கைக்காய் மேட்டரை மையமாக வைத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற பெயரில் சாந்தனு ஒரு படம் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காமெடியை விட கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது.
படம் வெளியாகி, அதுல்யா ரசிகர்களை வெறியேற்றும் என்பது மட்டும் இப்போதே உறுதியாக தெரிகிறது.