புதிதாக நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 35 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இணைப்புக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரினால் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள திருகோணமலை தலைமைக் காரியாலயத்தில் இந்த இணைப்புக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட 35 ஆயுர்வேத வைத்தியர்களும் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1