25.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

மைத்திரி உள்ளிட்ட 12 பேரிடம் நட்டஈடு கோருகிறார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட அல்லது நிரந்தரமாக அங்கவீனமாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குழு, இழப்பீடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 27 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் நிலந்த ஜெயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர மற்றும் சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு பற்றி தகவல்கள் கிடைத்திருந்தும், அலட்சியம் காரணமாக தமது பொறுப்பை நிறைவேற்றவில்லையென குறிப்பிட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆகையால், இறந்தவர்கள் மற்றும் அங்கவீனமானோருக்கு பிரதிவாதிகள் இழப்பீடு வழங்க வேண்டுமென மனுதாரர் கோரியுள்ளனர்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணியொருவர் சார்பில், நட்டஈடு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சங்கரிலா ஹொட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த சட்டத்தரணி 7மாதங்களிற்கு மேலாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டியிருந்ததாக அவரது சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் புஜித் ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, இராணுவத்தின் முன்னாள் தளபதி மகேஷ் சேனநாயக்க, கடற்படையின் முன்னாள் தளபதி பியல் டி சில்வா, விமானப்படை முன்னாள் தளபதி கபில ஜெயம்பதி ஆயுதப்படைகளின் பணியாளர்கள் ரவீந்திரகு குணவர்த்தன, முன்னாள் அரச புலனாய்வுத்துறை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன, சட்டமா அதிபர் உள்ளிட்டவர்களிடம்இழப்பீடு கோரியுள்ளார்.

ஷாங்கரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய  இன்ஷாஃப் அகமதுவின் தந்தை இப்ராஹிம் மற்றும் அவர்களது 3 சகோதரர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் இப்ராஹிம் மற்றும் அவரது மூன்று மகன்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், சிறைச்சாலை ஆணையர் நாயகம் மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொறுப்பதிகாரி கைது

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

Leave a Comment