மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களுக்கான வணக்க நிகழ்வு இன்று (05) காலை புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் நீதன் தலைமையில் நடைபெற்ற வணக்க நிகழ்வில் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
வணிகர்கள் தங்கள் வணிக நிலையங்களை பூட்டி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்கள். மதகுருமார் வணிகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1