Pagetamil
குற்றம்

தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே வட்டக்கச்சி மாயவனனுர் பகுதயில் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் புதைய தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து நேற்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்ப உபகரணங்களும் மீட்கப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

கைதான சந்தேக நபர்களில் வவுனியா பகுதியை சேர்நதவர் எனவும், மற்றவர் அம்பாறை பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர். இதேவேளை மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

Leave a Comment