நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்ற பெரும் கொள்ளைச் சம்பவத்தில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள், 12 மணித்தியாலங்களுக்குள் அப் பகுதி இளைஞர்களால் மீளக் கைப்பற்றப்பட்டது. சம்பவத்தில் நேரடித் தொடர்பாளர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த இளைஞர்கள், முறையாக கவனித்த பின்னர் சந்தேகநபர்களை சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த கொள்ளையில் 60 ஆயிரம் ரூபாய் பணம், மின்னியல் உபகரணங்கள், வீட்டின் ஜன்னல் மற்றும் கிறில்களையும் கழற்றி சென்றுள்ளனர்.
நாவற்குழியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை ஒன்றின் பின்பகுதியில் உள்ள வீட்டினை உடைத்து குறித்த கொள்ளை இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் நேற்று காலை வேலைக்காக வெளியே சென்றிருந்த வேளையில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொள்ளையுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களும் நாவற்குழி புதிய குடியேற்றத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பல களவுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை 8:30 மணிக்குப் பின் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று சுமார் 12 மணித்தியாலங்களுக்குள் நாவற்குழி இளைஞர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளது, கொள்ளையர்களையும் மடக்கிப் பிடித்து சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.