வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டிடமொன்றினுள் வைத்து முஸ்லிம் இளைஞனொருவன் நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில் நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் வழிபாட்டிடத்தினுள் சென்றுள்ளார்.
அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை விசாரித்தபோது கண்டி அக்குரனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் என தெரியவந்துள்ளது.
உடனடியாக அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1